Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம்…
பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடவுள்ள மினிபஸ்கள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும், யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும். கடந்த 10ஆம் திகதியன்று பலாலி…
யாழில். இரட்டையர்கள் சாதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான மருத்துவர் சி.ஜமுனாநந்தாவின் மகன்களான இரட்டையர்கள் உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர். ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் வரலாறு படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்த்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டடி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தினை நிறுத்தி விட்டு , தேசிய மக்கள் சக்தியினரை வெளியேற கோரிய நபரை , கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த…
டக்ளஸினால் சிங்கள நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருந்த திக்கம் வடிசாலை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அமைப்பிடம் 25வருடங்களின் பின்னராக மீள கையளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்துள்ளார்.…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் கொட்டடி – மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். இக்காணி தொடர்பாக மேலும் கூறுகையில், கொட்டடி – மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த…
சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு…
யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.