Tag யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி  அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இந்தக் கலந்துரையாடலில்…

யாழில்.பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 40 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளருக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால், உணவு கையாளும் நிலையங்கள், பூட் சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  அதன் போது, கோண்டாவில்…

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் இருந்து படகொன்றில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை ஊர்காவற்துறை பகுதியில் கைமாற்றப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,குறித்த பகுதியில் பொலிஸார் கண்காணிப்புக்களை தீவிரப்படுத்தி இருந்தனர். …

விதி வலியது!

 விதி வலியதென்பது அனைவரிற்கும் தெரியும்.இராணுவ பாதுகாப்புடன் கவச வாகனங்களில் பயணம் செய்து கட்டைப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா கைது அச்சத்துடன் காலம் மோட்டார் சைக்கிள்களிலும் லாண்ட் மாஸ்டர்களிலும்  அலைய விட்டிருக்கின்றது . தீவகத்திற்கு செல்லும் போதெல்லாம் பல்லக்கில் செல்வதாக காட்டிக்கொண்ட டக்ளஸ் இன்று பினாமியான தம்பியார் தயானந்தா கூட கைவிட்ட நிலையில் திரிவது விதியே…

தேர்தல் சலுகை:பேரூந்தில் ஏறலாம்!

தேர்தல் கால அறிவிப்பாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகளை திறந்த அனுர அரசு தற்போது பேருந்து சேவைகளை பிரச்சாரங்களுடன் ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை –  பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்படடுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக பேணப்பட்ட…

பங்காளிகள் சண்டை:மேதினம் சந்தேகம்!

அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும்  கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பங்காளிகளான இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்;ளது யாழ். ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலளர் செ.சிவசுதன் இன்று செவ்வாய்க்கிழமை  ஊடக சந்திப்பில்…

35 வருடங்களின் பின் பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் பேருந்து சேவை

35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் – பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன்…

அநுர அரசாங்கம் தொழிற்சங்கங்களை பொம்மைகளாக பாவிக்கின்றனர்

காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை அதே போன்றே அனுர தலைமையிலான அரசாங்கமும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு…

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ் . மாவட்ட செயலகத்தில் புதிய அலகு

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு  “உள்ளக அலுவல்கள்  அலகு” எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது.  இவ் அலகினை திறந்துவைத்து பின் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில்,  ஜனாதிபதி செயலகத்தின்  அறிவுறுத்தலுக்கு அமைவாக  மாவட்ட மட்டத்தில்உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட…