Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…
மாதகல் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் மரணம்! யாழ்ப்பாணம், சங்கானையில் இன்று (06) மாலை இடம்பெற்ற விபத்தில், மாதகல் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் கணபதிப்பிள்ளை உலகேந்திரராஜா உயிரிழந்தார். மாதகலிலிருந்து சங்கானை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றில் மோதியதில் உயிரிழந்தார். ஒற்றை வளைவு கோட்டை முறையற்ற…
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து இன்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது யாழ்- அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. …
நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு எங்களுடைய கட்சியின் அரசியல்…
செம்மணி மனிதப் புதைகுழியினை மேலும் 45 நாட்கள் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ள யாழ் நீதிவான் நீதிமன்றம் கட்டளையை ஆக்கியுள்ளது. நாளையுடன் ஆரம்ப ஆய்வு நிறைவுபெறுகின்றது, மேலும் 45 நாட்கள் அகழ்வு தொடர்ந்து மேற்கொள்வதற்கு நீதி அமைச்சிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு திட்ட பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை வழங்கப்டுள்ளது . இந்த வழக்கில்…
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும்…
யாழ்ப்பாணம், செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு இருகாக மேலுமொரு பாரிய மனித புதைகுழி இருக்கலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே அத்தகைய சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று வியாழக்கிழமை வரை 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன. புதைகுழியில் இரண்டாம் கட்டமாக நேற்றும் அகழ்வுப்…
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது…