Tag யாழ்ப்பாணம்

யாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசும் கடுமையான காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 04 குடும்பங்களை சேர்ந்த 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை…

வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை…

கதிரைகளிற்கான ஓட்டம் தொடர்கின்றது!

யாழ்ப்பாணத்தின் வடமராட்;சியிலுள்ள மூன்று உள்ளுராட்சி மன்றங்களில் இரண்டினை தமிழரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது. அதேவேளை பருத்தித்துறை நகரசபையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.நாளை வல்வெட்டித்துறை நகரசபைக்கான தெரிவு நடைபெறவுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவாகியுள்ளார். 20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்கு நடைபெற்று…

டக்ளஸை துரத்தும் தீவக புதைகுழிகள்!

1990ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண நகரை அண்மித்த மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.புதைகுழிகள் தொடர்பில் டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மண்டைதீவு, வேலணை மண்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி கொலைகள் மற்றும் புதைகுழி விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் முறையாக…

பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு – கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு

யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த  குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார். வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்…

பலாலி வீதி இரவு 07 மணி வரை திறந்திருக்கும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைப்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் தான் கலந்து கொண்டிருந்த வேளை, ஜனாதிபதியிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக வீதி இரவு 07…

வடக்கில் மனித புதைகுழிகள் – டக்ளஸிடம் விசாரணை செய்யுங்கள்

மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சிவஞானம் சிறீதரன், டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.  மேலும் தெரிவிக்கையில்  கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல்…

அரச உத்தியோகஸ்தர்கள் சகல விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும்

அரசாங்கம் எண்ணிமப்படுத்தலை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு எமது அலுவலர்களை நாங்கள் இப்போதே தயார்படுத்தி முன்மாதிரியாக செயற்படவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண பிரதம…

வடக்கு முதலீட்டு வலயங்கள் தொடர்பில் வூசூ அமைப்புக்கு தெரியப்படுத்திய ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும், இதற்குரிய மனிதவளத்தை தயார் செய்யவேண்டியுள்ளமை தொடர்பிலும் வூசூ அமைப்பினருக்கு வடமாகாண ஆளுநர் எடுத்துக்கூறியுள்ளார். வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள தொழில்வழிகாட்டல் மற்றும் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், வூசூ (WUSC) அமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்…

பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவையிடம்

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவாகியுள்ளார் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.…