Tag யாழ்ப்பாணம்

இரகசிய வாக்கெடுப்பால் வலி. கிழக்கை பறிகொடுத்த தமிழரசு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச…

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்.  வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11…

யாழில். இந்த வருடத்தில் 50 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.  இந்த வருடத்தில் இது வரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் டெங்கு காய்ச்சலுக்காக 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவன்…

யாழில்.இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழில்.இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.  நெடுதீவில் உள்ள தனது வீட்டில் கடந்த 15ஆம் திகதி இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ,…

செம்மணிப்புதைகுழி நீட்சி அறியப்பட வேண்டும்

செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  இலங்கையில் இனமுரண்பாடு தோன்றிய பின்னர் சிறுபான்மையின மக்கள் பல வழிகளிலும் பாதிப்புகளை எதிர் கொண்டனர்.…

யாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசும் கடுமையான காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 04 குடும்பங்களை சேர்ந்த 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை…

வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை…

கதிரைகளிற்கான ஓட்டம் தொடர்கின்றது!

யாழ்ப்பாணத்தின் வடமராட்;சியிலுள்ள மூன்று உள்ளுராட்சி மன்றங்களில் இரண்டினை தமிழரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது. அதேவேளை பருத்தித்துறை நகரசபையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.நாளை வல்வெட்டித்துறை நகரசபைக்கான தெரிவு நடைபெறவுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவாகியுள்ளார். 20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்கு நடைபெற்று…

டக்ளஸை துரத்தும் தீவக புதைகுழிகள்!

1990ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண நகரை அண்மித்த மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.புதைகுழிகள் தொடர்பில் டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மண்டைதீவு, வேலணை மண்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி கொலைகள் மற்றும் புதைகுழி விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் முறையாக…

பரபரப்பாக இடம்பெற்ற வாக்களிப்பு – கரவெட்டியை கைப்பற்றியது தமிழரசு

யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த  குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார். வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்…