Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக…
புதைகுழியினுள் புதிய புதையல்! செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது பொலித்தீன் பை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனுள் எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றன. அந்தப் பொலித்தீன் பை முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே அது பற்றிய…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் ஒரு எலும்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு…
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை இன்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர்…
கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு…
பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் மாணவியான 17 வயதுடைய தனது மக்களை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தாயார் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை…
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மாவையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி…
மாவை சேனாதிராஜாவின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ளது. யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் இருந்தது. அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன அவரது பலவீனம் என்ன என இன்று பலர் அறிவதற்கு தலைப்பட்டு இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். சங்கானை கலாசார…
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது உயிரை மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு பெற்று , தடுப்பில் இருந்து வெளியே வந்து ,தனது சகோதரியுடன் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில…