Tag யாழ்ப்பாணம்

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.  உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.  அந்நிலையில்…

பலாலி மீன்பிடி துறைமுக பகுதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் தற்போது துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில் துறைமுக பகுதிகள் மோசமாக சேதமடைந்துள்ளன. அத்துடன் , கடல் பகுதிகளில் கற்களும் காணப்படுகிறன.  இந்நிலையில் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கடல் தொழிலுக்கு செல்லும் போது. பல இடர்களை சந்தித்து…

திருநெல்வேலியில் உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள் , உணவகங்கள் என்பன பொது சுகாதார பரிசோதகரினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன  அதன் போது, பலசரக்கு கடை ஒன்றில் இருந்து , காலாவதியான பொருட்கள், சுட்டுத்துண்டு இன்றிய பொருட்கள்…

இரண்டு மணி நேர கடையடைப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.  அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.  விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.  மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

செம்மணி வருவார் ஜநா ஆணையாளர்?

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜநா ஆணையாளர் நேரில் வருகை தர பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து மலர்வணக்கம்…

முன்னணியும் வீட்டிற்கு அனுப்புமா?

சங்கு வேட்பாளர் மயூரன் திட்டமிட்டு தவிசாளர் தெரிவில் புறக்கணிக்கப்பட்டாரா? நடுநிலைமை வகித்த  சைக்கிள்  உறுப்பினரை பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்க சின்னத்தில் சாவச்சேரி பிரதேச சபை சார்பில் மயூரன் வெற்றி பெற்றார். தவிசாளர் தெரிவில் சங்கு சைக்கிள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என வெகுவாக…

தமிழ் தேசிய பேரவையிடமிருந்து கைநழுவிய சாவகச்சேரி பிரதேச சபை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை…

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.  செம்மணி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன்…

யாழில். திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை

யாழில். திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை ஆதீரா Monday, June 23, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை கடும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.  மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் மக்களின்…

யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக்…