Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற…
நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ் . மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகள் , அதனை தொடர்ந்து மகஜரை கையளித்தனர். சின்ன…
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட…
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம்,…
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை…
தோட்ட கிணற்றில் வாளியில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளான். அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீபன் தர்சன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். தனது பேரனாருடன் தோட்டத்திற்கு நீர் இறைக்க சென்ற சிறுவன் , பேரனார் நீர் இறைத்துக்கொண்டிருந்த வேளை , சிறுவன் கிணற்றினுள்…
செம்மணியில் நடைபெற்ற அணையா விளக்கு எழுச்சிப் போராட்டத்தின் இறுதி நாளன்று இடம்பெற்ற அரசியல்வாதிகள் சிலருக்கு எதிரான அநாகரிக வசை பாடல்கள் தமிழ்ச் சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் வருகையை எதிர்பார்த்து உணர்வெழுச்சியுடன் நடந்துகொண்டிருந்த போராட்டத்தின் செல்திசையை மடைமாற்றுவதுபோன்று அங்கு வந்திருந்த சிலர்…
செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கைக்குழந்தை உட்;பட்ட மூவரின் உடல்கள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரக் தமது அன்புக்குரியவர்களை தொலைத்த உறவுகளை சந்தித்தேன். பெண்கள் 1990 களின் நடுப்பகுதியில் தமது கணவன்மாரை இழந்துள்ளார்கள். தாங்கள் நேசித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு யூலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம்கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.