Tag யாழ்ப்பாணம்

யாழ்.மாநகர சந்தை கலகலக்க தொடங்கியது!

யாழ்.மாநகரசபை வழமை போலவே கூச்சல் குழப்பங்களுடன் தள்ளாட தொடங்கியுள்ளது. சபைக்கான நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை (27)விசேட அமர்வுக்காக இன்று திகதியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில்    முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின்…

செம்மணி:வலிதருகிறது!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தின் புதைகுழியில் குழந்தையை அணைத்தவாறாக தாய் ஒருவரதும் குழந்தையினதும் என்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டள்ளது.  செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டமாக இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு…

பலாலி சந்தையை விடுவியுங்கள்

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில், எங்களுடைய மக்கள் இன்னும் 2400…

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  இன்றைய  அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்…

யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி – முதல்வரை வெளியேற விடாது தடுத்த உறுப்பினர்கள்

யாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற விசேட அமர்வில் குழப்பம் ஏற்பட்டது.  கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, இன்றைய தினம் முதல்வர் மதிவதனி தலைமையில் விசேட அமர்வு ஆரம்பமானது.  கடந்த வாரம் சுகாதாரக் குழு உறுப்பினர் தேர்வில் ஏற்பட்ட…

வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை – சட்டவிரோத தொழிலாளிகளினால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி கரை திரும்பாத நிலையில் சக தொழிலாளிகள் அவரை கடலில் தேடி வருகின்றனர்  மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே காணாமல் போயுள்ளார்.  மணல்காட்டில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்றவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை…

யாழில். இ.போ.ச மற்றும் தனியார் இடையில் முரண் – செவ்வாய்க்கிழமை சேவை முடக்க போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற…

வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்

நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ் . மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகள் , அதனை தொடர்ந்து மகஜரை கையளித்தனர்.  சின்ன…

35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி – உயர் பாதுகாப்பு வேலிகளும் பின் நகர்த்தல்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.  உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.  கடந்த 35 வருட…

“போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்” சங்கானையில் போராட்டம்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம்,…