Tag யாழ்ப்பாணம்

அருச்சுனாவிற்கு ஆபத்தில்லையாம்?

யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்று மறுதலித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியிருந்தது.  எனினும், நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும்…

இன்றும் புதிதாக நான்கு!

செம்மணி மனிதப்புதைகுழியில் இன்றைய தினமான புதன்கிழமையும் தொடர்ந்த அகழ்வில் 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்படுள்ளது . செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் ஏழாம் நாள் அகழ்வு இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜாவின்  மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு…

செம்மணி புதைகுழியில் இருந்து 30 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, 4 எலும்பு…

டிஜிட்டல் யுகத்தில் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது

தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்/  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் லேர்ன்ஏசியா (LIRNEasia) நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம்…

யாழில் இருந்து காரில் வவுனியா சென்று இளைஞனை கடத்தி கொள்ளையடித்த மூவர் கைது

யாழில் இருந்து வவுனியா சென்று இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு சென்று, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞனை தமது…

செம்மணி வழக்குகளை இணைப்பதற்கு நடவடிக்கை ?

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும்,  முறையான நீதிமன்ற அனுமதியுடன் இரு வழக்குகளையும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தாம் ஆலோசனை செய்து வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான…

கிருஷாந்தி கொலை வழக்கின் சட்டமருத்துவ அதிகாரி பெரேரா செம்மணியில்

கிருஷாந்தி கொலை வழக்கின் சட்டமருத்துவ அதிகாரி பெரேரா செம்மணியில் கிருஷாந்தி கொலை வழக்கில் சட்டமருத்துவ அதிகாரியாகச் செயற்பட்ட கிளி போர்ட் பெரேரா, செம்மணிப் புதைகுழிப்பகுதிக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டமருத்துவ அதிகாரிகளுடனும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.  கிருஷாந்தி கொலை வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதான…

யாழில். கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  மானிப்பாய் பகுதியை சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்பவரே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்று கட்டில் படுத்து தூங்கியுள்ளார். அந்நிலையில் மறுநாள் காலையில் அவரது சடலம் கிணற்றினுள் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் மானிப்பாய்…

பொம்மையை கொல்லவில்லை!

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் முழுமையான எலும்புக்கூட்டுத் தொகுதி இன்று மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவனுடையதென நம்பப்படும் காலணி ஒன்றும் பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.  அதேவேளை பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூட்டுத் தொகுதிகளும் இன்று அடையாளம் காணப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.  அதன் காரணமாக அடையாளம் காணப்பட்ட…

செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்பு கூட்டு தொகுதி

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி…