Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்கு மூலம்…
கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள்…
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை தனங்களப்பு பகுதியில் நிறை போதையில் நின்ற வன்முறை…
வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில்…
யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோரே மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவரும் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,…
வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன் மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் மன்னார் கடற்பரப்பில்…
சாமியின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது புகழுடல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் , நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சமூக மற்றும் சமயப் பணிகளில் எஸ்.பி. சாமி அவர்கள் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரியின் வாடியடியினை நகரமயமாக்க ரணில் விக்கிரமசிங்காவால் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் நிதி அனுர அரசால் ஒரு சதமும் செலவின்றி திருப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியமைக்கு, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக,…
கஜேந்திரன் , வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு ஆதீரா Wednesday, February 19, 2025 யாழ்ப்பாணம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நடாத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலம் சேகரிக்க பொலிஸாரால்…