Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம், அதற்காக எமது மீனவ மக்கள் பதட்டம் அடைய மாட்டார்கள் என தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு…
வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன.…
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபையில் உறுதி அளித்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்…
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில் , அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக , கடற்தொழில்…
சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. அதன் போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள…
யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது ஆதீரா Friday, July 18, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90 மில்லி…
தையிட்டி விகாரைக்கு அமைச்சர்! வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் புதிய கட்டுமானங்களிற்கென வெட்டப்படும் கிடங்குகளை தேசிய மக்கள் சக்தி அமைச்சர் பார்வையிட்டுள்ளார். வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசன்னத்தில் விகாரைக்கு வந்த அமைச்சர் குழுவினர்களையும் அழைத்துச் சென்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை காண்பித்துள்ளனர். ஏற்கனவே வலிகாமம் வடக்கு பிரதேசசபை…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு நேற்று (16) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான…
செம்மணி மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட சிறுகுழந்தைகளது எலும்புக்கூட்டுத்தொகுதி மீதான ஆய்வுகளையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களினுடையதாக அவை இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.…
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட…