Tag முதன்மைச் செய்திகள்

அர்ச்சுனா தாக்கிய காணொளி வெளியானது!

யாழ்பாண உணவகம் ஒன்றில் மருத்துவரும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி உணவகத்தில் பொருத்தப்பட்ட கமராக்களில் பதிவாகியுள்ளன. அந்த காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா தன்னுடன்…

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை

‘விகாரையை இடிக்க வாரீர்’  என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு…

பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எல்லாம் நரகம் – டிரம்ப் எச்சரிக்கை

பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எல்லாம் நரகம் என்று டிரம்ப் எச்சரிக்கிறார் காசாவில் உள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியும் சில நாட்களுக்குள் விடுவிக்கப்படாவிட்டால் எல்லா நரகங்களும் உடைந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மீறுவதாகக் கூறும் பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ்  மேலும் பரிமாற்றங்களை ஒத்திவைக்க ஹமாஸ் என்ற போராளிக்குழு அச்சுறுத்தியதைத் தொடர்ந்து …

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது 53 பில்லியன் டொலர்கள் வேண்டும் – ஐ.நா

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தபட்சம் 53 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் 53 பில்லியன் டாலர்களுக்கு மேல் (€52.4 பில்லியன்) செலவாகும் என்று ஐ.நா மதிப்பிடுகிறது. முதல் மூன்று ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் தேவைப்படும் என்று கூறியுள்ளது.…

எதிர்வரும் சனிக்கிழமை பணயக்கைதிகளை அனுப்பாவிட்டார் மீண்டும் போரைத் தொடங்குவோம்

எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் காசாவில் தீவிரமான சண்டை மீண்டும் தொடங்கும் என்று  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.  இஸ்ரேல் முக்கிய விதிகளை மீறியதாக ஹமாஸ் திங்களன்று கூறியதைத் தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை மேலும் மூன்று பணயக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக பிற்போடுவதாக ஹமாஸ் கூறியதையடுத்து போர்நிறுத்தம் கேள்விக்குறியாகியது. சனிக்கிழமை நண்பகலுக்குள்…

விகாரையை-அகற்றும்-போராட்டம்-தொடங்கியது:-வலுச்சேர்க்க-அனைவரையும்-அழைக்கிறது

விகாரையை அகற்றும் போராட்டம் தொடங்கியது: வலுச்சேர்க்க அனைவரையும் அழைக்கிறது

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.  இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை  புதன்கிழமை (12) மாலை 6 மணி…

மாவையின்-மரணத்துக்கு-நாம்-தான்-காரணம்-என்றவர்களின்-பின்-பல்வேறு-சக்திகள்-உண்டு

மாவையின் மரணத்துக்கு நாம் தான் காரணம் என்றவர்களின் பின் பல்வேறு சக்திகள் உண்டு

மாவை சேனாதிராசாவின் மரணத்திற்கு நாம் தான் காரணம் என விஷம பிரச்சாரம் செய்தமைக்கு பின்னால், அரச புலனாய்வு, வெளிநாட்டுச் சக்திகள்,ஊடுருவல் சக்திகள், மாற்றுக் கட்சிகள் என எல்லாமே இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடக…

ஐந்தாவது பணயக் கைதிகளின் விடுதலையை ஒத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

அடுத்த பணயக்கைதிகள் விடுதலையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் அடுத்த விடுதலையை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் அறிவித்துள்ளது. சனவரி 19 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு…