Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தேர்தலுக்கான வேட்புமனு திகதி நிர்ணயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கீத் நொயர் கடத்தல்: இரண்டு முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது! ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. நவகத்தேகம மற்றும் எலயபட்டுவ பொலிஸ் பிரிவுகளில் நேற்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் ஊடகவிலாளர்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (01)…
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய…
இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் மூண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது. இதன்போது தெற்காசியா குறித்த சொற்பொழிவை…
திங்கட்கிழமைக்குள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று, இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்றும், அச்சங்கம் எச்சரித்துள்ளது. ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனநாயக்க, இன்று முதல் புதிய விநியோக கோரல்கள் எதுவும் பெற்றோலிய…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ்…
விவசாயிகளை ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு ஹொரவப்பதான தேர்தல் தொகுதியில் மக்கள் சந்திப்பொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு அந்த அந்த நாடுகளே விமான பயண சீட்டுக்களை வழங்கியது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான …
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…