Tag இலங்கை

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என தீர்ப்பு

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக,…

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.   நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.  இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச்…

போதைப்பொருளுடன் நாட்டுக்கு வந்த இந்திய தம்பதி!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது மற்றும் 29 வயதுடைய…

கனடா காசை கொண்டுவர முயற்சி!

வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய  – இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில்  கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு  வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய  – இலங்கை…

சான்று கையளிப்பு:அத்துமீறல்கள் தொடர்பில்…

இலங்கை கடற்பரப்பினுள் தமது அத்துமீறல்களை தமிழக அரசு தொடர்ந்தும் மறுதலித்தே வருகின்றது. இந்நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இன்று(17) யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள்…

புத்தளம் வீதியில் விபத்து – 21 பேர் காயம்

ஆதீரா Monday, March 17, 2025 இலங்கை  சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.  நிக்கவெரட்டியவிலிருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரம்,  கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…

முன்னாள் அமைச்சர் காஞ்சன தலைமையில் உதயமாகிறது புதிய கட்சி!

முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது.  இந்த அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளனர். இது தொடர்பான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் புதிய சின்னம் மற்றும் பெயர் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏதேனும் குற்றங்கள்…

போராட்டத்தில் குதிக்கும் அரச தாதியர் சங்கத்தினர்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.  அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவு திட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பன குறைக்கப்பட்டுள்ளதுடன் தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு…

ஜேவிபிக்கு தில் உள்ளதா? ஸ்ரீநேசன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  அதேவேளை வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. சட்டபூர்வமான அதிகாரம் பெற்ற சக்திகளாலும் துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. தற்போதைய தேசிய…