Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன குடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விமானப்படை கருத்து தெரிவிக்கையில், குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த…
சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படாமல் பணிக்கு சமூகமளிக்கத் தவறியதற்காக சிறீலங்கா முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டாவின் உத்தரவைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாக பதவி விலகாமல் சேவையிலிருந்து தப்பி ஓடிய முப்படையினரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பிப்ரவரி 22 அன்று தொடங்கப்பட்டன.…
தேர்தல் திகதி அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று (20) நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது…
இலங்கையில் உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளது. முன்னதாக மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி நண்பகல் வரை…
முன்னாள் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான பாட்டில்களும் 214 மது பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேடுதல் நடவடிக்கையில் இரண்டு மொபைல் போன்களும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களை நாங்கள் கண்டறிய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் யேர்மன் நாட்டவர் இலங்கை குடியுரிமை பெற்ற யேர்மன் பெண் ஒருவர் மாத்தளை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளார். அந்தப் பெண் தனது கட்டுப்பணத்தை செலுத்தி, சுயேச்சைக் குழுவின் கீழ் கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார். தனது வைப்புத்தொகையைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய அவர், தனது…
மதுபோத்தல்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்துக்குள்ளாது: மதுப்பிரியர்கள் போத்தல்களை எடுத்துச் சென்றனர் மதுரி Wednesday, March 19, 2025 இலங்கை அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் எஹலியகொட பிரதேசத்தில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட மதுபான…
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 19 நாட்களின் பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்றைய தினம் புதன்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி…
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் மற்றும் வார்த்தைகள் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன் என சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். அத்துடன், அர்ச்சுனா எதிர்வரும் மே மாதம் வரை பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற உரையை…
மன்னார் பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்று (18) மீளப்பெறப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சீராக்கல் மனுவொன்றை சமர்ப்பித்து, திட்டம் வாபஸ் பெறப்படுவதாக இந்திய அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையின்…