Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வடகிழக்கினை மையப்படுத்திய கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் ‘சோலார்’ தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். 500 கிலோவோட்டில் இருந்து 1 மெஹாவோட் வரை, நிறுவனங்களுக்கு, ஒரு அலகுக்கு…
தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட நாட்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மாற்றுத் திகதிகள் – ஏப்ரல் 28 மற்றும் 29 ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத்…
அனுராதப்புரம் -எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் வசித்து வந்த 69 வயது பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக…
பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையின் பாதுகாப்பு துறையின் முன்னாள் உயர் அதிகாரிகள் மூவர் உட்பட கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே வடக்கு, கிழக்கு மக்களையே ஆதரிப்பார்கள். அவர்களின் மனநிலை மாறாது. ‘பொதுத்தேர்தலின்போது 22 தேர்தல் மாவட்டங்களில் 21…
யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான…
இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள்தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள…
தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். அந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆணைக்குழு மறுஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தேர்தல்…
பஹ்ரைன் நாட்டிற்குச் செல்லும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மெனிங்கோகோகல் தடுப்பூசி இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பஹ்ரைன் அரசு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) அறிவுறுத்தலின் பேரில், வெளியுறவு அமைச்சு, பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இலங்கையர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. மெனிங்கோகோகல் நோய் என்பது நெய்சீரியா…
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக…