Tag இலங்கை

முதல் நாளே பல்லிளித்த மோடி பாலம்!

இலங்கை பயணத்தை முடித்து அனுராதபுரத்திலிருந்து இந்திய விமானப்படை உலங்குவானூர்தி மூலம் ராமேஸ்வரம் வந்த இந்திய பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைத்துள்ளார். அதை தொடர்ந்து, ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார்.  புதிய பாலத்தில் ரயில் சென்ற பின், செங்குத்து பாலம் தூக்கப்பட்டு கீழே…

அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு

எதிர்வரும் 20ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான புத்திக மனதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்தோடு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் பேராயர் இல்லத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு…

ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்

ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆதீரா Sunday, April 06, 2025 இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கொழும்பில் நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.  இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44…

இந்திய பிரதமர் அநுராதபுரத்திற்கு விஜயம்

இந்திய பிரதமர் அநுராதபுரத்திற்கு விஜயம் ஆதீரா Sunday, April 06, 2025 இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார், ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட…

மோடிவருகிறார்:மீன்பிடிக்க தடை!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாளை (06) ராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.   பிரதமர் மோடி…

இந்தியா – இலங்கை 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்!

மதுரி Saturday, April 05, 2025 இந்தியா, இலங்கை பாதுகாப்பு, இரண்டு மின் கட்டமைப்புகளின் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவும் இலங்கையும் பரிமாறிக் கொண்டன. திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய…

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’…

அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்…

வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை – இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி !

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்துள்ளார். இந்நிலையில், அவர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர். இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “ கொழும்பிலுள்ள இந்திய…

பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து

அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வரியை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கிறதென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு…