Tag இலங்கை

13 வேட்பாளர்கள் கைது

2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டார்.  இவருடன், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.  அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும்…

வீதி சோதனை சாவடி மீது மோதிய வான் – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நபர்…

அதானிக்கு கொழும்பில் செங்கம்பளம்:வடக்கிற்கு இல்லை!

இந்திய அதானியின் வடக்கிற்கான முதலீட்டை அனுர அரசு திருப்பியுள்ள நிலையில் தெற்கில் தனது முதலீட்டு நடவடிக்கையினை அதானி ஆரம்பித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்து திரும்பிய கையுடன் இலங்கையில் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது அதானி நிறுவனம். அதானி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அதன் பணிகளை ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக மேற்கு…

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான…

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ – நால்வர் உயிரிழப்பு

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ – நால்வர் உயிரிழப்பு குருநாகல் வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு குழாய் வெடித்ததன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீயை…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Post a Comment…

வாக்குமூலம் பதிவு செய்ய நாமல் ராஜபக்ஷ சிஐடிக்கு வருகை

வாக்குமூலம் பதிவு செய்ய நாமல் ராஜபக்ஷ சிஐடிக்கு வருகை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வந்துள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய தான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு…

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து உணவகங்களை சோதனையிடுங்கள்

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து உணவகங்களை சோதனையிடுங்கள் ஆதீரா Monday, April 07, 2025 இலங்கை நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.   உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை…

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு: பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பதவிநீக்கம்

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல பகுதியில் கடந்த 1 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வீடொன்றினுள்…

மோடிக்கு பரிசு:11 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

இந்திய பிரதமர் மோடியை மகிழ்விக் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை புறந்தள்ளி இந்திய மீனவர்கள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பின்னர், சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  ஜனாதிபதி அனுர குமார…