Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பானம பகுதி கடலில் நீந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்ததாக பானம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமற்போன இளைஞர்கள் 23 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மத்திய பானம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பானம பொலிஸார் மேலதிக…
உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தல் மற்றும் சத்தியக்கடதாசி குறைபாடுகள் என்பவற்றுடன் தொடர்புடையவகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இது சமச்சீரற்ற தேர்தலொன்று நடைபெறுவதற்கான வாய்ப்பினைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே இது குறித்து சட்டமா அதிபர் உடனடியாக உயர்நீதிமன்றத்தினைநாடி உரிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி…
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தினார். தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி…
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய – அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையில் இருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…
“ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை” நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்…
சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும்போது, தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்தார்.…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6ஆயிரம் பில்லியன் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம்சாட்டியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடன் வாங்குவதற்காக…
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுகிறோம். திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும்…
செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது, இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது. இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது. 2024 இல் மின்சார…
புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, மாக்கும்புர, கடுவெல, கடவத்தை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தங்களது பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து…