Tag இலங்கை

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில்  பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, பதில் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால், அனைத்து மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா…

கோடிக்கணக்கான பணத்துடன் புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது

தேவேந்திர முனை- ஹும்மான வீதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், மோட்டார் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும்,150 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  இன்று (17) அதிகாலை 4.00 மணியளவில் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை…

மக்கள் வரியே:அனுரவின் காசல்ல!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை கையாள்வதில் தடைகள் ஏற்படுமென மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக அவர்  அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்  மேலும் தெரிவித்துள்ளவாது, மன்னாரில் நடைபெற்ற உள்ளுராட்சி…

18 வேட்பாளர்கள் கைது

ஆதீரா Thursday, April 17, 2025 இலங்கை கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை…

தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது, உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைந்துள்ளோம். எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள்…

ட்ரம்பின் புதிய வரி கொள்கை : அரசாங்கம் வேலைத்திட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களின் பின்னர் நாம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் இதனை ஒரு அவசர நிலைமையாக அறிவித்து, நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

கடத்தல் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் – உதயகம்மன்பில

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது…

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளனர்

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட உள்ளதாகவும்  இவ்வாறானவர்கள் தொடர்பிலான நீண்ட பட்டியலொன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் எவரும் தாம் குற்றம் இழைத்து…

வெலிக்கடை சிறையில் மிகப்பெரிய பால் சோறு தயாரிப்பு

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் இலங்கையின் மிகப்பெரிய பால் சோற்றை தயாரித்துள்ளனர்.  சிறைச்சாலை சமையலறையில் பணிபுரியும் 50 கைதிகளின் உதவியுடன் பால் சோறு தயாரிக்கப்பட்டுள்ளது.  400 கிலோகிராம் பச்சை அரிசி மற்றும் 705 தேங்காய், 60 கிலோ வெங்காயம், 12 கிலோ காய்ந்த மிளகாய், 7…

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்றைய தினம் புதன்கிழமை தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.  வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.  இது குறித்து தபால் மா அதிபர் ருவன் சத்குமார மேலும்…