Tag இலங்கை

அனுர மோடி ஒப்பந்தம் வெளிவரும்?

அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் அனுர அரசு தொடர்ந்தும் திருட்டு மௌனம் காத்துவருகின்றது இந்நிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;. இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு…

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இடம்பெற்ற விருந்து உபசார…

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு ஆதீரா Tuesday, April 22, 2025 இலங்கை சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு   துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு…

நீர்கொழும்பில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பி சென்றுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  நீர்கொழும்பு பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு , வட்டிக்கு பணம் தேவை என கூறி இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களை வீட்டுக்குள் அழைத்து தொழிலதிபர் உரையாடிக்கொண்டிருந்த வேளை…

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுவதாக ஜீவன் எம்.பி குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.  இக்…

CCTV கமராக்கள் மூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தண்டம்

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வாகன விதிமீறல்களைச் செய்த 4000இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி குறித்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கடந்த ஆண்டு…

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடு இரண்டாயிரத்தை தாண்டியது

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடு இரண்டாயிரத்தை தாண்டியது ஆதீரா Monday, April 21, 2025 இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி) 2,011 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில்…

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  அதற்கமைய, முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் மே மாதம் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது.  2025 இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மீண்டும் மே மாதம்…

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பேரின் பெயர்களும் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் 6 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை  கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.  அதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களும் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைமுறைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்கொள்ளும்…