Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையில் நிலவும் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு (மே 21) இலங்கையை வந்தடைய உள்ளதாக வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இந்தக் கப்பலில் மொத்தம் 3,050 மெட்ரிக் டன் உப்பு உள்ளடங்குவதாக உறுதிப்படுத்தினார்.…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். ரமித் ரம்புக்வெல்லவின் தந்தை, முன்னாள் அமைச்சர் தொடர்பான விசாரணையில் சந்தேக நபராக அவரைப் பெயரிட அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து நேற்று (மே 20) நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளிக்க இன்று…
ஆதீரா Wednesday, May 21, 2025 இலங்கை ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68…
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (20) அந்தந்த தூதரங்களில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ…
அடுத்தடுத்து உள்ளே? கோட்டபாயவின் ஆலோசனையில் உரம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த அமைச்சர் சிறைக்கு சென்றுள்ளார். கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்து நிதி வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
வடமராட்சி கிழக்கு தாளையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கியில் இருந்து நீர் வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் காலை 8.30க்கு சமய நிகழ்வுடன் ஆரம்பானது. நிகழ்வில் பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி யசோதரன், பருத்திதுறை நீர்…
முன்னாள் எம்.பி மிலானுக்கு பிணை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜெயதிலக்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச…
மஹிந்தானந்த விளக்கமறியலில்! நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னிலையானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து தரமற்ற சேதன பசளையினை நாட்டுக்கு இறக்குமதி…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இந்திய தூதர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் பரிசில்களை வழங்கி ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய ஆணையர் சந்தோஷ் ஜா, கண்டியில் உள்ள மல்வத்து பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய வாராகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர்…
இலங்கையில் என்றுமில்லாத அளவில் உப்பின் விலை அதிகரித்து செல்ல தொடங்கியுள்ளது .இந்நிலையில் வடகிழக்கில் பெய்துள்ள திடீர் மழைகாரணமாக உப்பு விளைச்சல் மேலும் பாதிக்கப்படலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது திடீரென பெய்த கனமழையால் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய…