Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் குழந்தை ஒன்று குளிர்பானம் என நினைத்து போத்தலில் இருந்து டீசலைத் தவறுதாகக் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிற்சை பலனின்றி குழந்தை நேற்று…
அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று விடயங்களை…
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது ஆதீரா Sunday, March 23, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது, 805 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. …
யாழ்ப்பாணத்தில் சுமார் 84 கிலோ கிராம் கஞ்சா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா பொதிகளை மீட்டனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 84…
யாழ்ப்பாணத்தில் டீசலை சோடா என அருந்திய குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியை சேர்ந்த சதீஸ் சஞ்ஜித் என்ற ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் வீட்டில் கடந்த 18ஆம் திகதி சிறிய ரக உழவு இயந்திர திருத்த வேலைகள் இடமபெற்ற போது, சோடா போத்தல் ஒன்றில் டீசலை வைத்துள்ளனர். அதனை…
யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன அந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு…
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள…
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில், குறித்த நிறுவனங்கள்…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 25 மாவட்டங்களிலும் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…
வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பு மனு நிராகரிப்புக்கள் தொடர்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் என நாடு முழுவதும்…