Tag யாழ்ப்பாணம்

யாழ் . பல்கலை மாணவன் மீதான பகிடிவதை – 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை 

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார். விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர்…

யாழ் . பல்கலை மாணவன் மீதான பகிடிவதை – மனிதவுரிமை ஆணைக்குழுவும் விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பல்கலை மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில், பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக…

வடக்கில் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதிக்கப்படுகிறது

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  கலந்துரையாடலில், நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்பட்டதுடன், அவசர தேவைக்குரிய விண்ணப்பங்களை நேரடியாக ஒப்படைக்குமாறும்,…

கழிவுகளை கொட்டுபவர்களை அடையாளம் காட்டுங்கள் – நடவடிக்கை எடுக்கிறோம்

குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொடர்பில், அவர்களை அடையாளப்படுத்தினால் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றுச்சூழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.  அதன் போது, செம்மணி, வல்லைவெளி, கைதடி – கோப்பாய் வீதிகளில் கோழிக்கழிவுகள் முறையற்ற…

யாழ் . பல்கலை பகிடிவதை – குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ; ரஜீவன் எம்.பி வலியுறுத்தல்

ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறை – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் எதிர்பாராத துயரத்திற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை…

மீன்பிடி அமைச்சர் – கப்பலில் வேலையாம்!

கிளிநொச்சி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் புதிய கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுமென தெரிவித்து வாக்கு சேகரிப்பில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே துறைமுகங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி வடமராட்சியில் உள்ள  இளைஞர்களை உள்ளுராட்சி தேர்தலுக்காக  ஏமாற்றி வேலைவாங்கத் தொடங்கியுள்ளதாக மற்றொருபுறம் குற்றச்சாடடுக்கள் எழுந்துள்ளன. முன்னதாக அங்கயன் இராமநாதன் வேலை வாய்ப்பு வழங்கவதாக…

பகிடிவதைக்கு உள்ளான யாழ் . பல்கலை விஞ்ஞான பீட மாணவன் – காது கேட்கும் திறனும் இழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.  மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,  மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும்…

யாழில். 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வீதியில் சென்ற பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.  வாகனத்தினுள்…

வடக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் 'டிஜிட்டல்' திரையில்

சகல சந்தைகளிலும் ஏனைய சந்தைகளின் முதல் நாள் மரக்கறிகளின் விலைகளை ‘டிஜிட்டல்’ திரை மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுத்தியுள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்  இடம்பெற்றது.  அதன் போது, உள்ளூராட்சிமன்றங்களுக்குச் சொந்தமான சந்தைகளில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு…

வீதி மின் விளக்குக்கு கட்டணம் அறவிட்டால் , மின் கம்பங்களுக்கு கட்டணம் அறவிடுவோம்

வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிட வேண்டியிருக்கும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.  அதன் போது, வீதி மின்விளக்குகள் பொருத்துவதில்…