Tag யாழ்ப்பாணம்

யாழில். புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழில். புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு ஆதீரா Tuesday, April 15, 2025 யாழ்ப்பாணம் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்  தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு…

தமிழ் மக்கள் தமிழரசு பக்கமாம்:சுமா!

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக்கிளை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் “யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதரவு கூட தமிழ்க் கட்சிகளுக்கு கிடையாது. தேசிய மக்கள் சக்திக்கு தான் அந்த ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது என அராசாங்கம்…

டக்ளஸ் கைது?

யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகளை அடுத்து யாழில் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதாவதற்கு வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதாகி மூன்று மாதங்களிற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் பிள்ளையான்…

யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைதாவர் – புத்தாண்டில் சுமந்திரன் ஆரூடம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் பொங்கலும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகளை அடுத்து யாழில் ஒரு…

புத்தாண்டில் நல்லூரானுக்கு சிறப்பு பூஜை

புத்தாண்டில் நல்லூரானுக்கு சிறப்பு பூஜை மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , காலை 07 மணிக்கு வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய்…

வடக்கிற்கு ஆப்பு:மின்சாரம் வேண்டாமாம்!

இலங்கையின் வடபுலத்திலிருந்து சோலார் மூலமான மீள்புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியை கட்டுப்படுத்த அனுர அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று  13ஆம் திகதி தொடக்கம்  ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பகல் வேளைகளில்; முற்பகல் 10மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய…

சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3 மணி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் வீட்டுக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி…

புத்தாண்டு விடுமுறைக்கு யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில்  பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.    பேரதெனியா…

யாழில். எறும்பு கடிக்கு இலக்கான 22 நாளான சிசு உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது.  குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக  நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை…

தாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்லவாம்

நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ்…