Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி வருகை தரும் போது, யாழ்…
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் துருப்பிடித்த நிலையில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐந்துமாடி கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படகுத்துறையில் பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த படகொன்றினை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் அப்புறப்படுத்த முனைந்த போது படகின் அடியில் துப்பாக்கி காணப்பட்டுள்ளது அது தொடர்பில் யாழ்ப்பாண…
உள்ளுராட்சி சபை தேர்தலில் வடகிழக்கை சுருட்டிக்கொள்ள ஆளும் அனுர அரசு முனைப்புகாண்பித்தே வருகின்றது. அதற்கேதுவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மறுதினம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் விஜயத்தின் போது நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில்…
உள்ளுராட்சி சபை தேர்தலில் வடகிழக்கை சுருட்டிக்கொள்ள ஆளும் அனுர அரசு முனைப்புகாண்பித்தே வருகின்றது. அதற்கேதுவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மறுதினம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் விஜயத்தின் போது நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில்…
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த…
தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், என்.பி.பி. ஜே.வி.பி இரண்டும் ஒன்றுதான்…
அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் JVP என்ற தோற்றத்தின் உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக…
யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். அது…
யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வவுனியா பட்டாணி புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் அவரது…
யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியை வீதியோரமாக நிறுத்தி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை மிக…