Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் 17ஆவது நாளாக தொடரும் நிலையில் ஆறு மாதங்களேயான வயதுடைய குழந்தையினது உடல என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இன்று அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் அவதானிப்பின் அடிப்படையில் கைக்குழந்தைகள் உட்பட அனைத்தும் சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளேயென மருத்துவ அதிகாரி தகவல்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தும் வகையிலான அணி திரள் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை, மறுநாள் வெள்ளிக்கிழமை ஆகிய…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள்…
யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். …
ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார். எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில்…
சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை வடமாகாண ஆளுநரிடம் பிரதேச சபையினர் முன் வைத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் ஆதன மதிப்பீடு மேற்கொண்டு வரி அறவிடுவதற்கான…
மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை பழைய கச்சேரியினை பார்வையிட்டு ஆராய்ந்தனர். இதற்கு முன்னராக மாவட்டச் செயலகத்தில் உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் …
விவசாய நடவடிக்கைகளுக்காக எனும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை நிரந்தமாக குடியமர்த்த யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை அவரது அலுவலகத்தில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடினர். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதி…
இலங்கை படைகளால் திருமலையின் அரங்கேற்றப்பட்ட சம்பூர் மனிதப் புதைகுழி 35 வருடங்களின் பின்னராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து, கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இன்றையதினம் மீள ஆரம்பமாகியுள்ளது. இன்றைய…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. …