Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிப்பட்ட போதும் யாழ் மாநகர சபையில் தமிழ் கட்சி ஒன்றுக்கு தமது ஆதரவு நிச்சயம் இருக்கும் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வருகின்ற மாதம் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருகின்றது. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில்…
மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில். தேசிய மக்கள் சக்தி என கூறிக்கொள்ளும் ஜே.பி.வி யினர் அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர். யாழ்ப்பாணத்தில்…
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கூட்டத்திற்கு செல்லவில்லை என கூறி இளைஞன் ஒருவரை கைது செய்து பொலிஸார் மனிதாபிமானற்ற இந்த இளைஞனை அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்றினை பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான…
யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால், சக தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக, யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபையில் நாம்…
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு , தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளதாக சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ் , மாநகர சபை…
இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் , இறைவன் இவரது ஆன்மாவுக்கு நித்திய…
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம்.…
யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுகாதார தொழிலாளி ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். வைத்தியசாலை முன்றலில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்…
யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். வலி. வடக்கு வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட…
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார். அதன்போது,…