Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
தாங்கள் இனவாதம் இல்லை என்றும் இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை என செல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜேவிபியினர் தான் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில்…
வல்வெட்டித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடியவாறு சூழலை வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குடியிருப்புகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கள தரிசிப்புக்களுக்கு சென்ற வேளை டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய மூன்று குடியிருப்பாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்…
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்குநேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால், 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும்…
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் கடற்தொழில் சங்க தலைவர் ஒருவரை அமைச்சர் சந்திரசேகரன் முன்னிலையில் அவரது உதவியாளர் தாக்கியமை அம்பலமாகியுள்ளது. எனினும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பதிலளிக்க கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதிக்கு நேற்றைய தினம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு சென்ற கடற்தொழில் அமைச்சர், அப்பகுதி கடற்தொழில் சங்க தலைவரை அவரது…
தமிழக சிறைகளில் கடந்த 34வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த மாலுமி சிவதம்பி நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் இன்று தாயகம் வந்தடைந்துள்ளார். கடந்த 1991இல் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்திய கடற்படையால் வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்ட கப்பலில் இருந்த சிவத்தம்பி உள்ளிட்டவர்கள் மீது தடா வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் சிறையிலும், விடுதலையாகி சிறப்பு முகாமிலும் இருந்தவர்.…
யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ் . புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார் இது தொடர்பில் குறித்த யுவதியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வைத்தியரால் முறைப்படு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வைத்தியசாலை பணியாளர் ஒருவரை…
யாழ்ப்பாணத்தில் மோசடி வழக்கில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது…
யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யோக்கட்களை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18 செல்சியஸ் வெப்ப நிலையில்…