Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த…
இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பலர் நீதிமன்றத்தின் பிணையில் நிற்பவர்களே. களவுகள் செய்து நீதவான் நீதிமன்ற பிணையில் இருப்பவர்கள் தற்போது வேட்பாளராக நிற்கிறார்கள்.இவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எங்களுக்கு பிரசங்கம் செய்கிறார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல்…
கே.கே.எஸ். வீதியை ஏ.கே.டி.வீதி என மாற்றினால் கூட யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றினால் அந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் கூட குரல் எழுப்ப முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு…
யாழில். நிலவும் அதீத வெப்பம் – ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார் இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை…
யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை அயல் வீட்டு பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணொருவரும் இணைந்து சிறுமியை மிரட்டி பிற ஆண்களுடன் உறவு கொள்ள வைத்து , பணம்…
பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடவுள்ள மினிபஸ்கள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும், யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும். கடந்த 10ஆம் திகதியன்று பலாலி…
யாழில். இரட்டையர்கள் சாதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான மருத்துவர் சி.ஜமுனாநந்தாவின் மகன்களான இரட்டையர்கள் உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர். ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் வரலாறு படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்த்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டடி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தினை நிறுத்தி விட்டு , தேசிய மக்கள் சக்தியினரை வெளியேற கோரிய நபரை , கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த…
டக்ளஸினால் சிங்கள நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருந்த திக்கம் வடிசாலை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அமைப்பிடம் 25வருடங்களின் பின்னராக மீள கையளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்துள்ளார்.…