Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தை…
வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு…
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஒரு சிரட்டை கஞ்சி என்பது வெறும் சடங்கு அல்ல. அது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக எம் இனம் முன்னெடுக்கின்ற அமைதிவழிப் போராட்டம். மக்கள் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கைகளில் சிக்குண்டு எவ்வகையான அழிவுகளுக்கு முகங்கொடுத்தார்கள், அவ் அழிவினையே தங்கள் போராட்டத்தின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதற்கான அடையாளமாக சிரட்டைக் கஞ்சி உருவகம் பெற்றுள்ளது.…
தமிழ் கட்சிகள் அஞ்சும் அளவிற்கு கடந்த அரசாங்கங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்தடம் பதிக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஒன்றே தமிழ் கட்சிகளுக்கு தோல்வி பயத்தைக் காட்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்கள் மனதில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்…
உள்ளூர் அதிகார சபைகளில் ஆட்சி அமைக்க தேசிய மக்கள் சக்திக்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு வழங்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…
வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக்கட்சி நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மதுபானம் மற்றும் பணத்தை இலஞ்சமாக வழங்கியதான குற்றச்சாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. தமிழரசுக் கட்சியை அண்டிப் பிழைத்த அட்டைகள் சில இப்போது கஜேந்திரகுமாரின் முதுகில் ஏறியிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின்…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், நல்லூரடியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின்…
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கண்டி – முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை அடுத்து…
வல்வையில் இடம்பெற்ற இந்திர விழா ஆதீரா Tuesday, May 13, 2025 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம் இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி…