Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தினார் என கூறி நபர் ஒருவர் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால்…
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர் இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின்…
தையிட்டி விகாரையை இடிக்க தமிழ் மக்களை அணிதிரளுமாறு தான் அழைப்பேதும் விடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்…
மாவை சேனாதிராசாவின் மரணத்திற்கு நாம் தான் காரணம் என விஷம பிரச்சாரம் செய்தமைக்கு பின்னால், அரச புலனாய்வு, வெளிநாட்டுச் சக்திகள்,ஊடுருவல் சக்திகள், மாற்றுக் கட்சிகள் என எல்லாமே இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடக…
தையிட்டி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை போராட்டம் ஆரம்பமாகின்றது. விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல்…
தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே. ஆகவே சுமூகமான தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்க்கக்கூடிய தீர்வை முன்னெடுக்க கூடாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சீன அரசின் உதவி வழங்கும் நிகழ்வின் பின்னர்…
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு…
வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாணசபை முறைமை நீண்டுநிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. எனினும், மாகாணசபை…
வலிகாமம் வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். அத்துடன், தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர்…
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பை தமிழ்ச் சமூகமும், ஊடகச் சமூகமும் ஆழமாக உணர்கிறது என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன். ஊடகத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை. தனது அர்ப்பணிப்பு மற்றும்…