Tag யாழ்ப்பாணம்

செம்மணியில் இன்று 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன – புதிய இடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 05 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 05 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 25மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 16…

தாவடியில் கத்தி குத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன்…

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ் . வந்தவர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குருநகர் பகுதியி சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்தவர், குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார். தனது விடுமுறையை கழிக்க அண்மையில், தனியாக யாழ்ப்பாணம் வந்து…

புதைகுழிகளில் படுகொலை?

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் அங்கு அழைத்துவரப்பட்டு புதைகுழிகள் முன்பதாக கொல்லபட்டு புதைக்கப்பட்டிருப்பதான சந்தேகங்கள் வலுத்துவருகின்றது. இன்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி மனித புதைகுழியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறிய பால் போத்தலும் சிறிய இரும்பு உருண்டைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு வiகைப்படுத்தப்பட்டு நீதிமன்றினால்…

சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு

இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலைக்கான “விடுதலை” எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்பின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பு வாசலில் இருந்து தொடங்கிய நடைபயனம் கிட்டுப் பூங்காவினை அடைந்து.…

“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி

நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான  கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது. நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில்” எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 24 வரை இக் கண்காட்சி  இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று…

செம்மணியில் இன்று 03 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 04 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 23 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில்…

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றது

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று  போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு…

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தாமதமாக காரணம் என்ன ? சபையில் சிறிதரன் கேள்வி

நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக மீளச்செலுத்த தேவையற்ற 65மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையிலும், துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதற்கான காரணம் என்ன என்றும் சபையில் கேள்வியெழுப்பினார்.…

யாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த நேசராஜன் சர்வேந்திரன் (வயது 51) என்பவரே படுகாயமடைந்த நிலையில் ,…