Tag யாழ்ப்பாணம்

அருச்சுனா கராட்டிக்காரன்:அச்சத்தில் சந்திரசேகரன்!

தையிட்டி போராட்ட களத்தை திசை திருப்ப அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதான குற்றச்சாட்டின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையே முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அல்ல என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாண நட்சத்திர விடுதி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உட்பட மூவருக்கு…

வேலை வேண்டும்: வேலையில்லாப் பட்டதாரிகள் போராட்டம்

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட…

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என போலி பிரச்சாரம் – கஜேந்திரகுமாருக்கு பிணை

தையிட்டியில் விகாரையை இடிக்க வாரீர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.  தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில்…

வெற்று கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்

வடக்கு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம் எதிர்வரும்  24ஆம் தேதி முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன் தெரிவித்தார். எனவே விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசிகளின் போதில்களை சூழலில் வீசாது அவற்றை தமது தோட்டப்புறங்களில் வைத்தால் அவற்றை விவசாயத் திணைக்களம் கொள்வனவு செய்யும்…

தையிட்டி விவாகரம் – மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம்

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் இ ,  சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,…

அருச்சுனா எம்.பி க்கு காராட்டி தெரியும் – ஊடகவியலாளர்களை எச்சரித்த கடற்தொழில் அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என ஊடகவியலாளர்களிடம் கடற்தொழில் அமைச்சர் இ, சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.  செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.  அதனை…

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடல் தீயுடன் சங்கமம்

 மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.  யாழ்ப்பாணம் –…

இஞ்சியும் கடலால் வருகிறது?

இஞ்சியும் கடலால் வருகிறது? தமிழ்நாடு இராமநாதபுரம் கடல் வழியாக, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த இஞ்சி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, திருப்புல்லாணி அடுத்து தோப்புவலசை கடற்கரையில் இருந்து, படகு மூலமாக இஞ்சி இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக, இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு, கிடைத்த தகவலை தொடர்ந்து, சேதுகரையில் இருந்து தோப்புவலசை வரையான கடற்கரையில்,…

அர்ச்சுனாவும் துன்பியல் என்கிறார்!

பொதுமக்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக கைது அச்சத்தின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பதிவில், “என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஸ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லித்…