Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தல்…
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழரசு…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து தாய் மாமனும் மருமகனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்பவரும் , அவரது தங்கையின் மகனான தனுஷன் டனுசன் (வயது 03) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த மகிந்தன் தனது மனைவி, தங்கை…
யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு ஆதீரா Monday, February 17, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார். குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டார் என கடந்த 14ஆம்…
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில் இருந் நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு…
தொலைக்காட்சி பார்ப்பதற்காக , தொலைகாட்சிக்கு மின் இணைப்பினை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் , வேலணை பகுதியை சேர்ந்த சந்திரஹாசன் கனிஸ்டன் (வயது 09) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான் சிறுவனின் தாயார் அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற வேளை வீட்டில் இருந்த சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக தொலைக்காட்சிக்கு மின் இணைப்பை இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்ப…
நபரொருவரை கடத்திச் சென்று 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி ஒருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா கொள்ளையடித்த குற்றச்சாட்டு தொடர்பில்…
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே , யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். இதன்போது துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர். குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள் ,பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு…
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஏழாலை ஏழு கோவிலடியில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கடற்றொழில்…