Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் – கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது. ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450ற்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர். குறித்த கையொப்பங்கள் அடங்கிய…
யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் …
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை மாவட்ட செயலர் வலியுறுத்தினார். மேலும், ஒப்பந்தகாரர்களினால்…
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டி பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில்…
வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், என்னைப் பார்த்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நீங்கள் …
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது , அனுமதிகள் பெறப்பட வேண்டும். ஆனால் அனுமதிகள் பெறாமல் திறக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மூட முடியாதது. அவர்கள் அனுமதி பெறுவதற்கான கால…
நல்லூர் சூழலில் அமைந்துள்ள அசைவ உணவகம் அகற்ற கோரி போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக ஆரம்பித்த பேரணி யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது. இதன்போது யாழ் மாநகர…
நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே தான் போட்டியிடவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். ஆகவே, இப்போது அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. அதையே திரும்பத் திரும்பப் பேசி குழப்ப வேண்டாம் என பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி…
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற தமிழரசுக்கட்சியை சார்ந்த ஒருசில ஆதாரவாளர்கள் மதுபானம் வழங்கினார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தலைமைப்பீடம் அதனை செய்யுமாறு கோரியிருக்காது. எங்களுக்கு அது நன்கு தெரியும்.நான் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனவருத்தத்தை தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் வல்வெட்டித்துறை…