Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். ” தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ..” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில்…
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர் மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்க்கில் குறிப்பாக எமது…
புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது. தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்…
யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும் , மற்றுமொரு உணவகத்தில்…
இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது…
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான பகுதியை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த…
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி! யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும்…
தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்கு மூலம்…
கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள்…
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள் அதிபரும் கடந்த சனிக்கிழமை பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை தனங்களப்பு பகுதியில் நிறை போதையில் நின்ற வன்முறை…