Tag யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் , வன்முறை கும்பலுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் , மகனின் மனைவி மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீது கடந்த 19ஆம் திகதி தாக்குதல்…

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  ஜனநாயக தமிழ் தேசிய…

சாமியின் புகழுடல் தீயுடன் சங்கமம்

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று , சாட்டி இந்து மயானத்தில் அவரது புகழுடல் தகனம் செய்யப்பட்டது. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானார். அன்னாரது புகழுடல் வெள்ளிக்கிழமை…

யாழ் . மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து – இருவர் காயம்

யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர் யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

யாழில். புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.  கல் வீச்சு தாக்குதலில் புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தும் , பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள்…

யாழில் இறுதி ஊர்வலத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் (வயது 30) என்பவரே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள்…

கப்பல் சேவை மீள ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமானது. நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது இன்று மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. 83 பயணிகள் குறித்த கப்பலில் அங்கிருந்து வருகைதந்திருந்த நிலையில், பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டனத்திற்கு, பயணத்தை ஆரம்பித்த…

யாழ் வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது

போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோசடியாக பெற்றிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.  யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான…

யாழில். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மோதிய வாகனம் – 06 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது…

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.  குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், தனது குடும்ப வறுமை…