Tag யாழ்ப்பாணம்

யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் தண்டம்

காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.  அதன் போது வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர் ஒருவர் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக…

மாடு கடத்திச் சென்றவர்கள் சாவகச்சேரியில் கைது!

மாடு கடத்திச் சென்றவர்கள் சாவகச்சேரியில் கைது! மதுரி Tuesday, February 25, 2025 யாழ்ப்பாணம் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18 மாடுகளை நேற்று  திங்கட்கிழமை (24) இரவு சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில்…

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு…

தமிழினியின் மரணத்தில் சந்தேகம் – தந்தை கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி  பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  உயிரிழந்த பிரதேச செயலக உதவி பிரதேச செயலரின் தந்தையான பி. சண்முகராசா ,…

யாழில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு…

நெடுந்தீவில் உழவு இயந்திரம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்  நெடுந்தீவு பகுதியை சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.  நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த போது , பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதகுக்கு அருகில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது. …

இடிப்பது இனவாதமாகும் : அருச்சுனா உபதேசம்!

தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதத்தை கட்டியெழுப்பும் ஆகவே தான் அதை இடிக்க வேண்டாமென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எந்தவொரு கோவில் மற்றும் விகாரை இடிக்கப்பட்டாலும் அது கலவரத்தை தூண்டக்ககூடிய விடயமாக மாறும், சிலர் அதை உடைத்ததெறிய வேண்டும் என தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாhர். இதனிடையே…

நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு

நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.  யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம்…

யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் , வன்முறை கும்பலுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் , மகனின் மனைவி மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீது கடந்த 19ஆம் திகதி தாக்குதல்…

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  ஜனநாயக தமிழ் தேசிய…