Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம்…
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக…
யாழ்.போதனாவிலும் போராட்டம் ஆதீரா Thursday, February 27, 2025 யாழ்ப்பாணம் அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக தாதியர்கள் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு நேரத்தில் நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி…
யாழில் வயரிங் வேலையில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள மேல்மாடி கட்டடம் ஒன்றில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்த வேளை இருந்து தவறி விழுந்து…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர்…
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைதடி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் வாகனம் இன்றைய தினம் புதன்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கோப்பாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இன்று புதன் கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளனர்.. நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து…
பெரும் பிரச்சாரங்களுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க…
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நீதிமன்றிற்கு தொழில் நிமித்தம் வருகை தந்த அவர் கருத்து வெளியிடுகையில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா…