Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் இன்று உறுதியுரையினை செய்தார். யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்…
தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நகைகளை அடகு வைத்தவர்களில் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் என்பவரே…
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 லீட்டர் கசிப்பையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர். …
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நாடத்திய போது, 15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராமம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கால் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’…
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க…
உள்ளுராட்சி சபைகளது கதிரைகளை தக்க வைப்பது தொடர்பில் எங்களுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது என்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸினர் அறிவிக்க விரும்பவில்லை. ஆகவே இணக்கப்பாடு இல்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் சபைகள் அமைக்கின்ற விடயத்தில் இணங்கியிருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் சபைகளது…
ஆதீரா Friday, May 30, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 இந்தியத் தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளன என்று வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 484 இலங்கைத் தமிழ் குழந்தைகளும், 5 சிங்களக் குழந்தைகளும், 14 இந்தியத் தமிழ்க் குழந்தைகளும், 17 இஸ்ஸாமியக்…
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த முதியவரிடம் நாடு திரும்புவதற்குத்…
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர்…