Tag யாழ்ப்பாணம்

முன்னணி -கூட்டணி ஒப்பந்தம்!

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியினை பிடித்துக்கொள்ள ஏதுவாக தமிழ் தேசிய பேரவை என்றழைக்கப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று திங்கட்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய…

செம்மணியில் பாரிய மனித புதைகுழி – இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.  அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம்…

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம்

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர்.  தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது.…

சைக்கிளுக்கும் சங்குக்கும் இடையில் ஒப்பந்தம்

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது.  டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.   இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட …

சங்கு சந்திரகுமார் நல்லம்??

தமிழ் தரப்புக்களிடையே இணக்க முயற்சிகளை முன்னெடுத்தவர்களையெல்லாம் துரோகிகள் அல்லது இந்திய உளவாளிகளென சாயமடித்த முன்னணியின் தமிழ் தேசிய பேரவை கதிரைக்காக ஆலாய் பறக்கிறது.அதிலும் ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக்கும் தயார் என முன்னணி இறங்கிவந்துள்ளது. முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன கூட்டணி உடன்பாட்டை பெரும்பாலும் இறுதி…

பரிதாபம்:தந்தையை தொடர்ந்தும் மகனும் மரணம்!

பரிதாபம்:தந்தையை தொடர்ந்தும் மகனும் மரணம்! தூயவன் Sunday, June 01, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைக் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிந்த நிலையில் விபத்தில் பலியான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்களது மகனும் மருத்துவசிகிச்சை பலனின்றி இன்று அகால மரணமடைந்தார். வவுனியாவில் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபாகரனின் புத்திரனும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான மனைவியும்…

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1981 மே 31…

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.  யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.  இந்த…

கஜேந்திரன் தும்புத்தடியா?

வடமாகாணசபை தேர்தலில் தும்புத்தடியொன்றை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்தே வருகின்றது. நேற்றைய தினம் தமிழரசு –முன்னணி தலைவர்கள் சந்திப்பு முடிந்து புறப்படும் போது தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்டார்.…