Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையின் பெண்களின் பாதுகாப்புக்காக செயலாற்றும் Unity for Women Safety Sri Lanka (UWSSL) என்ற அமைப்பாக, சமீபத்தில் ஒரு YouTube Content Creator இனால் இடம்பெற்ற அவமதிப்பு சம்பவத்தை உறுதியுடன் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், உதவிக்காக அணுகிய குடும்பத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, அக்குடும்பத்திலிருந்த இளம்பெண், தனது…
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன…
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வருகை தந்த மதப்பிரச்சாரகர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படவுள்ளதாக ஈழம் சிவசேனை அறிவித்துள்ளது. அவர்கள் சிவ பூமி ஆன யாழ்ப்பாணத்தில் சைவர்களின் மரபுகளையும் மாண்புகளையும் சிதறடிக்க முயன்றனர். மேலைநாட்டுப் பணத்தில் இயங்கும் இக் கைக்கூலிகளை யாழ்ப்பாணத்துச் சிவ சேனையினர் ஓட ஓட விரட்டினர். 04 ம் திகதியன்று சென்னை விமான நிலையத்திலிருந்து…
கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என ஆயிரம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள்…
ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார் யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு , தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வட மாகாண ஆளுநர்…
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளுக்கு பல இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜாவினால் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும்…
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை வீடியோக்களை பதிவிட்ட வாறு பல்வேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்துள்ளார். …
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு: பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல்…