Tag யாழ்ப்பாணம்

யாழில். அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன்…

யாழில். மயங்கி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு

யாழில். மயங்கி விழுந்த உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  நெல்லியடி மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரான வடமராட்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தணிகைவேல் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். வதிரியில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்த நிலையில் , அவரை வீட்டார் பருத்தித்துறை…

யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில்

யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில் ஆதீரா Monday, March 10, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  ஆனைக்கோட்டை பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயது இளைஞன் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான்.  கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர்…

யாழில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.    குறித்த குழுவினரை  குடிவரவு குடியகல்வுத்துறை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டனர் இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக…

குப்பையை கண்டுபிடிக்க கமெரா!

குப்பையை கண்டுபிடிக்க கமெரா! யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில்  வீதிகளில் குப்பை போடுவோரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக நகரம் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ் மாநகர சபை மேற்கொண்டு வருகிறது.  யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் நிலையில் இனம்…

புலம்பெயர் தமிழருக்கு அல்லவா :மோசடியாளரிற்கு சிறை!

கைது செய்யப்பட்ட யூரியூப்பர் கிருஸ்ணா மீது நாளை மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அநேகமாக பிணை நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது. அல்லது 3 மாதங்கள் வரை சிறையிலடைக்க வாய்ப்புள்ளது.  ஜபிசி பாஸ்கரனால் ஆரம்பிக்கப்பட்டு கல்லா கட்டப்பட்ட உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி…

சர்ச்சைக்குரிய யூடியூபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ..

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன…

யாழில். கல்சியம் நீக்கியை அருந்தியவர் உயிரிழப்பு

யாழில். கல்சியம் நீக்கியை அருந்தியவர் உயிரிழப்பு ஆதீரா Sunday, March 09, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  கொடிகாமம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் யோகேஸ்வரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.  வீட்டில் இருந்து கல்சியம் நீக்கியை அருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்  வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ…

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கண்டனம்

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும்…