Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்துவதற்காக தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் மு.ப…
தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினால இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் எவ்வாறாயினும்,தேர்தல் முடிவடைந்ததன் பின்னர்…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை மறுதினம் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள நிலையில் அதன் பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது . இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின்…
குருசுவாமி சுரேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் விநோநோகராதலிங்கம் பெயரில் கோடிகளில் லஞ்சம் பெற்றதாக விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சுமத்தியுள்ளார். தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாகுமெனவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிடுகையில் தற்போதைய அரசாங்கம் அரசியல் கைதிகளை…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆசனங்கள் கிடைக்காத நிலையில பரஸ்பரம் கட்சி மாற்றங்கள் உச்சம் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில்…
வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர். அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ…
யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது: யாழில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபரை, வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த 2022ஆம் உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞனின் கைவிரல் துண்டாட்டப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் , மூன்று இளைஞர்களை நேற்றைய…
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் புதன்கிழமை காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணி புறக்கணிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்துவருகிறது அதற்கு வலுசேர்க்கும்…