Tag யாழ்ப்பாணம்

பரமார்த்த குருவும் மூன்று நா.உறுப்பினர்களும்!

இலங்கை அரசினால் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள பூரண பௌர்ணமி நாளில் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியை நையாண்டி செய்துவருகின்றன ஏனைய தரப்புக்கள். நேற்றைய தினமான வியாழக்கிழமை பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் பௌர்ணமி நாளில் முன்னெடுக்கப்படுவதுடன் ழுழு அளவில் விடுமுறை அரச தனியார் துறைகளிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை…

வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக  தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் வெள்ளிக்கிழமை (14) யாழ் . தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர்.  தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி…

யாழில். 16 சபைகளில் தனித்து களமிறங்கும் மான்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் . தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர்.  தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர்…

யாழில். கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்குவாதம்

யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அந்நிலையில் தற்போது , மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதனை தேசிய மக்கள்…

கச்ச தீவு திருவிழா இன்று மாலை ஆரம்பம் – சிங்கள மொழியிலும் மறையுரை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகி, நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் முடிவடையவுள்ளது.  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறும்.  நாளைய தினம் சனிக்கிழமை, காலை…

தமிழரசை பிளவுபடுத்த சதி

தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரசாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு…

சொன்னது என்னாச்சு??

யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் கைப்பற்றுமென சாத்திரம் சொல்லியுள்ளார் சந்திரசேகரன். இந்நிலையில் வலிகாமம் வடக்கில்  பல விடுவிக்கக்கூடிய சாத்தியப்பாடான இடங்களை விடுவிப்பதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லை. விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பலாலி அம்மன் கோவில் விடுவிக்கப்படவில்லை. தடைகளுடனேயே சென்று வர அனுமதிக்கப்படுகின்றது. மயிலிட்டி காணிக்கை மாதா கோவில்  அதன் அருகில் உள்ள பாடசாலை பிரதான வீதிக்கு அருகில் இருந்தும்…

உச்சத்தில் குழப்பம்:பிளவு இல்லையெனும் சீவீகே!

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்கள் தெரிவில் தமிழரசுக்கட்சி பாரிய பிளவை சந்தித்துள்ளது.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு அணி மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆதரவு அணியென பிளவுண்டு கிளிநொச்சி மற்றும் கிழக்கில் தனித்தனி வேடபாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதனிடையே இலங்கை தமிழரசுக்கட்சியை உடைத்து புதிய தமிழரசுக்கட்சியொன்றை உருவாக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக வெளியான செய்தியை அக்கட்சியின் பதில் தலைவர்…

39 ஆதவற்ற தெருவோர நாய்களை எடுத்து வீட்டில் வளர்க்கும் குடும்பம்!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால்…

மௌனத்தை கலைப்போம்

மௌனத்தை கலைப்போம்  வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம் எனும் தொனிப் பொருளில் மக்கள் கவனயீர்ப்பு செயல்வாதம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா…