Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பரின் விளக்கமறியலை மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 27…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியது. மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும்,…
அநாதரவான உடலம் மீட்பு! வடமராட்சியின் கரணவாய் புறப்பொறுக்கி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கரணவாய் புறப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக உள்ள சேவிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணிக்குள் இருந்தே இன்று செவ்வாய்க்கிழமை சற்று முன்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் இறந்து சுமார்…
கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ்ப்பாண மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது. காணாமல் போயுள்ள யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் நடைபெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் தெரிவித்துள்ளார். மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் அதிகாரிகளுடன் கடற்றொழில்…
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில்…
சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்திய பின்னரே…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் இன்று (17) ஆரம்பமான நிலையில் நேற்று வரை 16ம் திகதி வரை 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம்…
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன் , பொலிஸ்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று…
யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயதான இளைஞர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த இளைஞன் ஐரோப்பாவிற்குச் செல்வதாக முகவர்களினால் கடந்த வருடம் 2024 மார்கழி மாதம் 28ஆம் திகதி விமானத்தில்…