Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்.மாவட்டத்தில் பரவலாக தமிழ் கட்சிகளது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது கட்சி உயர் நீதிமன்றம் செல்லத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனால் யாழ்.மாவட்டத்தில் சில சபைகளிற்கான தேர்தல் இடம்பெறுமாவென்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையில் வி.மணிவண்ணன் தலைமையிலான…
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பென்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை இன்றைய தினம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், …
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர காவல் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் இருவரும் குருநகர் பகுதியை…
யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சை நிலையத்தில் , அப்பகுதியை சேர்ந்த இரண்டு பாடசாலை…
ஆசனம் பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாக பயணிக்க கூடிய எம்மை பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு முழுவதற்கும்…
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை…
தம்மை மட்டுமே தூயவர்களாக காண்பித்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தற்பேர்து ஏனைய தரப்புக்களுடன் கூட்டு சேர முன்வந்திருப்பதால் தமது நிலைப்பாட்டை மீள பரிசீலித்துள்ளதாக தமிழரசுக்கட்சி பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் புதன்கிழமை (19) தாக்கல் செய்துள்ளது. தமிழ் தேசிய…
யாழில். தமிழரசும் வேட்புமனு தாக்கல் ஆதீரா Wednesday, March 19, 2025 யாழ்ப்பாணம் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர்…
யாழில் தமிழ் காங்கிரஸ் வேட்பு மனு தாக்கல் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
யாழ்ப்பாணத்தில், நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தரை சந்தேகநபர் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பதுங்கியுள்ள இடம்…