Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக கூடவிருக்கும்…
யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளையதினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை…
செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டத்தக்கதாக முன்நகரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு…
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். தையிட்டி விகாரை…
யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களில் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகளின் போது , போராட்டம் நடத்தியவர் சார்பாக…
கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன. குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கோப்பாய் பொலிஸார் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1995ஆம் ஆண்டு காலம் முதல் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள 09 தனியார் வீடுகளையும் அதனுடன் கூடிய காணிகளுமாக 2.77 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி 30…
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் 30 வருட காலங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை நிலுவையாக விட்டு சென்றுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறித்த கட்டடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த…
” எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் ” என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் , தெல்லிப்பளை வைத்தியசாலை போர் மற்றும் இடப்பெயர்வுகளின்…
யாழில் வெடிமருந்துகள் மீட்பு! ஆதீரா Thursday, June 12, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்தவர்கள் வெடிமருந்துகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடிமருந்துகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம்…